பாதித்த பக்கம்வழி
பாட்டுவரும்=அதன்
பல்லவி சரணத்தில்
நெருப்பு எழும்…………..

நீடித்த அடக்குமுறை
நிறுத்தபடும்=நீ
நிமிர்ந்து புறப்படு
விடிவு வரும்……………..

முதுகொடிக்கும் கும்பலோ
முடங்கிவிடும்=நீ
முண்டாசு கட்டும்போது
கொடுமை அழும்………..

துன்பத்தின் கிடங்குகளில்
துப்பாக்கியெடு=நீ
துடைத்திட நினைப்பவையை
துவளாமல் சுடு………………

ஆதிக்க கழுத்தறுக்க
அறுவா தீட்டு=நீ
அழகு தமிழனைக்க
அனைவரையும் கூட்டு……….

புராண புழுநசுக்க
புயல்வலிமை காட்டு=நீ
புத்தம்புது நாடமைக்க
புரட்சிபடை சேர்த்து…………..
=====================

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book