காதல் சமயத்தில்
கைசேர்த்து நுழைவோம்…………….
காலத்தின் கண்களுக்கு
காதலராய் தெரிவோம்………………..

காத்து கிடக்காமல்
சொர்க்கத்தை அமைப்போம்……….
களவுளின் மதமின்றி
கருணையை சமைப்போம்……………..

காதலியை
தேர்வுசெய்ய
கற்றுகொடுப்போம்
கண்களுக்கு…………………………

கண்களின்
முடிவு ஏற்க
விட்டுதருவோம்
காதலிக்கு……………..

காதலின்
கோயிலில்
அன்பை மட்டுமே
கடவுளாக்குவோம்…………..

கடவுளின்
அன்பை பெற
காதலராய்
வாழ்ந்து முடிப்போம்……………

முத்தங்கள்
மட்டுமே
நம்
சொத்துக்கள் என்போம்……………..

மூர்க்கமான
சாதிகளை
வேண்டாமென
எழுதிகொடுப்போம்
எமனுக்கு…………………………………

கொள்கை விளக்கி
கொடி எற்றி
கட்சி அமைப்போம்
காதலுக்கு………………………………..
=========================

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book