உயிருக்குள்
முக்குளித்து=உயர்
உள்ளத்தில்
முத்தெடுக்கும் காதல்!!!

இருட்டுக்குள்
பயணித்து=இரு
இதயத்தில்
பகலடிக்கும் காதல்!!!

நிலவுக்குள்
தீக்குளித்து=இந்த
நிலத்திற்குள்
தேன்பாய்ச்சும் காதல்!!!

தோட்டத்தில்
குயில்பிடித்து=இணை
தொடசொல்லி
கூவசொல்லும் காதல்!!!

தேனீக்கள்
மாநாட்டில்=அவளை
தேடியமர
மறுப்பளிக்கும் காதல்!!!

பூநாட்டின்
கருவறையில்=உள்ள
புதுநகையை
களவாடும் காதல்!!!

விழியூரின்
நதிக்கரையில்=நாளும்
விளைவிக்கும்
நற்கவிதை காதல்!!!

தாயன்பு
கிடங்குகளில்=தன்
தாரம்தர
கொள்ளையிடும் காதல்!!!

தங்கத்தின்
சுரங்கத்தில்=ஒரு
தாளிக்கு
சுழன்றுழைக்கும் காதல்!!!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book