கால் நூற்றாண்டில்
காலம் மாறியது=உன்
கால்பட்ட இடமெல்லாம்
கலகம் பற்றியது……………

அடக்கிய குரலோலி
அடங்கி நடுங்கியது=உன்
அத்துமீறு மந்திரத்தால்
அடிமை நொருங்கியது…………

சினத்தை தொலைத்து
சிறைபட்ட இனமொன்று=உன்
சிறுத்தை இயக்கத்தால்
சீறிப்பாய துணிந்துதது……..

மின்சார பாய்ச்சல்
மீட்சிக்கு திரண்டது=உன்
மீசையின் முறுக்கல்
மின்னலாய் பிளந்தது…………..

வல்லரசு நாட்டாமை
வர்க்கபேதம் அழியுது=உன்
வாள்மாற்றும் வாசகத்தால்
வண்கொடுமை ஒழியுது………….

ஈழத்தின் விடுதலையை
இதயம் பேசுது=உன்
ஈரத்தின் கண்ணீரும்
இலங்கையை எதிர்க்குது………..

தாய்தமிழ் காத்திட
தன்மாணம் பிறக்குது=உன்
தலைமையை ஏற்கத்தான்
தமிழகமே கிடக்குது…………

தந்தைக்கு பெயர்வைத்தாய்
தமிழகமே வியக்குது=உன்
தமிழ்பெயர் சூட்டுதலை
தமிழினமே ஏற்குது………….

அம்பேத்கர் விருதுபெற்ற
அவர்வழி நேசரே=உன்
அதிசய அரசியல்தான்
அணைவரையும் அணைக்குது……..

அங்கனூர் அளித்திட்ட
அழியாத வேந்தரே=உன்
அடுக்குமொழி கேட்டுத்தான்
அகிலமே இயங்குது………………..

வரலாற்றை திணறவைத்த
வாழ்கையின் துணைவனே=நீ
வழிகாட்ட வந்திடுவோம்
வாழ்கயென் தலைவனே…………..
===========================

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

பெத்தவங்க Copyright © 2015 by சடையன் பெயரன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book